ஆனந்தியின்
வெற்றிப்பாதை
'ஆனந்தம் ஆனந்தம்
À¡Îõ மனம் ஆசையில் ஊஞ்சலில்
ஆடும்..' என்று ஆனந்தியின்
மனம் இந்நேரமும் ஆனந்தத்தில்
ரிங்காரமிட்டுக் கொண்டிருக்கும்.
கோலாலம்பூர் மாநகரைச்
சேர்ந்த ஆனந்தி ஆக்ஸ்ஃப்போர்ட்
பல்கலைக்கழகத்தில் மனோதத்துவ
துறையில் தனது
இளநிலை
பட்டப்படிப்பை மேற்கொண்டார்.
தொடர்ந்து அதே பல்கலைக்கழகத்தில்
பொருளாதாரத்துறையில்
தனது முதுகலை பட்டப்படிப்பையும்
வெற்றிகரமாக முடித்தார்.
தற்போது அதே பல்கலைக்கழகத்தில்
மனோதத்துவ துறையில் தமது
பி.எச்.டி பட்டப்படிப்பை
மேற்கொண்டு வருகிறார்.
நம் மலேசிய மண்ணில் பிறந்த
இந்த பெண்மணியின் வெற்றி
நமக்கும் வெற்றித்தான்.
ஆனந்தியின் பெற்றோர்களும்
கோலாலம்பூரைச் சேர்ந்தவர்கள்
தான். முன்னாள் பேராசிரியர்
ராமையா மற்றும் பேராசிரியை
முல்லை ராமையாவின் மகள்
தான் ஆனந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
þÅ÷ படிப்பில் மட்டுமல்லாது
மற்ற துறைகளிலும் அதிக
நாட்டம் உள்ளவர். திறன்
பெற்ற பரதக்கலைஞர், பரத
ஆசிரியை, யோக பயிற்றுனர்
என பல துறை திறனாளராக
பரணமிக்கிறார் ஆனந்தி.
இவருடைய இந்த வெற்றிக்கு
உறுதுணையாக இருந்து வரும்
தனது குடும்பத்தினருக்குõ
கணவர் சுமித்ரனுக்குõ
இந்த வேளையில் தனது நன்றியைத்
தெரிவித்துக்
கொள்கிறார்.
கல்வி வளர்ச்சியில்
இவர் கொண்டுள்ள தீவிரம்
மற்றும் சமூகம் சார்ந்த
கடப்பாடுகளின் அடிப்டையில்
2005-ஆம் ஆண்டின், சிறந்தவர்
Á¡½Å÷¸ளுக்கான மெக்சிசின்
உபகாரச் சம்பளத்தை பெறும்
திட்டத்திற்கு தேர்வுப்
பெற்றிருக்கிறார் ஆனந்தி.
இதற்கு தேர்வு செய்யப்பட்ட
¦Á¡ò¾õ 3 பேர்களில் ஆனந்தியும்
ஒருவர்.
நம் இந்திய பெண்கள்
கல்வி, அரசியல், பொருளாதாரம்,வியாபார
துறை என அனைத்து துறைகளிலும்
முன்னேற்றம் கண்டு பல
அரிய சாதனைகளை அடைந்து
வருகின்றனர். இதற்கு
திருமதி.ஆனந்தி ஒரு நல்ல
எடுத்துக்காட்டு.
"இந்த துறைதான் சிறந்த
துறை என்று எதுவும் இல்லை.
எல்லா துறைÔõ சிறந்த துறைதான்.
ஒவ்வொரு துறையிலும் அதற்கென
தனித்தன்மையும் சிறப்புகளும்
இருக்கின்றது. ஆகவே, வாழ்க்கையில்
முன்னேற வேண்டும் என்ற
துடிப்பு உள்ள ஒவ்வொருவரும்
தங்களுக்கு பிடித்த துறையைத்
தேர்வு செய்ய வேண்டும்.
பின்னர் அந்த துறையில்
முன்னேறுவதற்கான
சிறந்த
யுக்திகளை மேற்கொண்டால்
வாழ்க்கையில் நிச்சயம்
வெற்றிப்பெறலாம் என்று
திருமதி.ஆனந்தி அண்மையில்
மின்னல் FM வானொலி நிலையத்திற்கு
அளித்த பேட்டியில் இதனை
தெரிவித்தார்.
ஆனந்தியின் வெற்றிப்பயணம்
தொடர வணக்கம் மலேசியா
நிறுவனத்தின் மனமார்ந்த
வாழ்த்துக்கள். எதிர்காலங்களில்
திருமதி.ஆனந்தி போல நிறைய
ஆனந்த பூக்கள் நம் மலேசிய
மண்ணில் உருவாக அனைவரும்
பிராத்திப்போமாக.