மகாகவி சுப்பரமாணிய
பாரதியார்
காணி நிலம்வேண்டும்-
பராசக்தி
காணி நிலம்வேண்டும்-
அங்கு,
தூணில் அழகியதாய்-
நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்-
அந்தக்
காணி நிலத்திடையே-
ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும்;-
அங்கு!
கேணி யருகினிலே-
தென்னைமரக்
கீற்று மிளநீரும்
பத்துப் பன்னிரண்டு-
தென்னைமரம்
பக்கத்தி
லேவேணும்;- நல்ல
முத்துச்
சுடர்போலே- நிலாவொளி
முன்பு
வரவேணும்;- அங்கு
கத்தூங்
குயிலோசை- சற்றே வந்து
காதிற்
படவேணும்;- என்றன்
சித்தம்
மகிழ்ந்திடவே- நன்றாயிளந்
தென்றல்
வரவேணும்.
பாட்டுக் கலந்திடவே-
அங்கேயொரு
பத்தினிப்
பெண்வேணும்;- எங்கள்
கூட்டுக்
களியினிலே- கவிதைகள்
கொண்டு
தரவேணும்;- அந்தக்
காட்டு
வெளியினிலே- அம்மா! நின்றன்
காவ லுறவேணும்; -என்றன்
பாட்டுத்
திறத்தாலே- இவ்வையத்தைப்
பாலித் திடவேணும்.