விதிமுறைகளை
மீற வேண்டாம்
கோத்தா பாரு, பிப்
15- பொது தேர்தலுக்காக பிரச்சாரம்
மேற்கொள்ளும்போது உணர்ச்சிகரமான
விவகாரங்களை கையில் எடுத்துக்
கொள்ள வேண்டாம் என அரசியல்
கட்சிகளுக்கு போலீஸ்
வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொது தேர்தல் தங்கு
தடையின்றி சரளமாக நடைபெறுவதற்கு
எல்லா தரப்பும் விதிமுறைகளைப்
பின்பற்ற வேண்டுமென கிளந்தான்
துணை தலைமை போலீஸ் அதிகாரி
அமீர் ஹம்சா இப்ராஹிம்
தெரிவித்தார். இன விவகாரம்,
அவதூறு, வெறுப்புணர்வு
போன்றவற்றை கிளற வேண்டாம்
எனவும் அவர் கேட்டுக்
கொண்டார்.
தேசிய முன்னணி மக்களுக்கு
வஞ்சனை செய்யாது
கோத்தா பாரு, பிப்
15- மக்களுக்கு சன்மானம்
வழங்குவதில் தேசிய முன்னணி
அரசாங்கம் வஞ்சனையாக
செயல்படாது என துணைப்
பிரதமர் டத்தோஸ்ரீ முகமட்
நஜீப் துன் ரசாக் தெரிவித்தார்.
சன்மானம் வழங்க
வேண்டும் என்ற காலம்
வரும்போது அரசாங்கம்
தாராளப் போக்கை கடைபிடிக்கும்
என்றார் அவர். அரசு தொடர்புடைய
நிறுவனங்களில் கிடைக்கப்பெறும்
லாபங்களை போனஸ், சம்பள
ஒருங்கிணைப்பு போன்றவற்றின்
வழி மீண்டும் அதன் ஊழியர்களுக்கே
வழங்கப்படும் என அவர்
சொன்னார்.
நாட்டின் சுபிட்சத்திற்காக
கடந்தாண்டு பொது ஊழியர்களுக்கு
ஊதிய உயர்வை அரசு வழங்கியதை
அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய அரசாங்கத்தின்
பரிவுமிக்க பார்வை கிளந்தானின்
மீது மேம்பாட்டு திட்டங்கள்
வழி பதியப்பட்டிருக்கிறது
என அவர் கூறினார்.
கணவரின் வெற்றிக்காக
மனைவிமார்கள் பாடுபட
வேண்டும்
கோத்தா பாரு, பிப்
15- பொது தேர்தலுக்கு தேர்ந்தேடுக்கப்படும்
வேட்பாளர்களுக்கு உதவியாக
அவர்களின் துணைவியர்கள்
இணைந்து பிரச்சாரத்தில்
ஈடுபட வேண்டும் என துணைப்பிரதமரின்
துணைவியார் டத்தின்ஸ்ரீ
ரொஸ்மா மன்சோர் கேட்டுக்
கொண்டார். தங்களின் கட்சி
வெற்றி பெறுவதை குறிப்பாக
கிளந்தானில் வெற்றி பெறுவதை
உறுதி செய்வதற்கு இது
அவசியம் என்றார் அவர்.
இதுவரையில் மக்கள்
பிரதிநிதிகளின் துணைவியர்கள்
மேற்கொண்டிருக்கும்
நடவடிக்கைகள் எனக்கு
திருப்தியளிக்கிறது.
அவர்கள் மிக உற்சாகமாக
மக்களைச் சென்று சந்திக்கின்றனர்.
கணவரின் வெற்றிக்காக
பிரச்சாரம் செய்யாமல்
தேசிய முன்னணியின் வெற்றிக்காவும்
பிரச்சாரம் செய்ய வேண்டும்
என அவர் கேட்டுக் கொண்டார்.
கிளந்தானில் நடைபெற்ற
நிகழ்வொன்றில் கலந்து
கொண்டு அவர் இவ்வாறு
பேசினார்.
'ஜெண்டில்மேனாக'
நடந்து கொள்ளுங்கள் -
கேவியஸ்
கோலாலம்பூர், பிப்
15- பிபிபிக்கு கொடுக்கப்பட்ட
இடங்களை மீண்டும் அக்கட்சிக்கே
கொடுப்பதில் தேசிய முன்னணியின்
உறுப்புக் கட்சிகளான
ம.சீச. கெராக்கான், ம.இ.கா.
ஆகியவை 'ஜெண்டில்மேன்'
போக்கை கடைபிடிக்க வேண்டும்
என பிபிபி கட்சியின்
தலைவர் டத்தோ எம். கேவியஸ்
தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட
மூன்று கட்சிகளின் பொது
செயலாளர்களுக்கும் பிபிபி
கடிதம் அனுப்பிவிட்டதாகவும்
இதுவரையில் எவ்வித முடிவும்
தெரியவில்லை எனவும் அவர்
சொன்னார்.
கடந்த ஆண்டு மார்ச்
மாதம் இக்கடிதம் அவர்களிடம்
சமர்ப்பிக்கப்பட்டதாக
அவர் சொன்னார்.
அதே கடிதம்
இம்முறையும் வழங்கப்பட்டிருக்கிறது.
அதன் நகல் அக்கட்சிகளின்
தலைவர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
கடிதம் வழி அவர்கள் பதில்
அளிப்பார்கள் என்று நான்
எதிர்பார்க்கிறேன் என்றார்
அவர். அதில் உள்ள கருத்தை
ஏற்றுக் கொண்டாலும் நிராகரித்தாலும்
சரி எந்த முடிவாக இருந்தாலும்
நான் ஏற்றுக் கொள்வேன்
என அவர் செய்தியாளர்களிடம்
தெரிவித்தார். முன்பு
பிபிபி கட்சிக்கு பேரா
மாநிலத்தில் 4 நாடாளுமன்ற
தொகுதிகளும் 12 சட்டமன்ற
தொகுதிகளும் ஒதுக்கித்
தரப்பட்டன.
வெடிகுண்டு கண்டுபிடிப்பு
கோலாலம்பூர், பிப்
15- இங்குள்ள ஜாலான் ராஜா
மூசா பதுல் அஸிஸ் முன்புறத்தில்
உள்ள நடைபாதையில் வெடிகுண்டு
ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
விஸ்மா பெர்னாமாவிலிருந்து
அரை கிலோமீட்டர் தொலைவில்
இச்சம்பவம் நிகழ்ந்தது.
இதைத் தொடர்ந்து
ஜாலான் ராஜா மூடா அப்துல்
அஸிஸின் இருவழி பாதையும்
மூடப்பட்டது. இதனால்
சுமார் இரண்டு மணி நேரம்
ஜாலான் துன் ரசாக் பாதை
நெரிச்சலானது.
'லிங்கம்' விசாரணை:
விண்ணப்ப மனு நிராகரிப்பு
கோலாலம்பூர், பிப்
15- டத்தோ வி.கே. லிங்கம் படக்காட்சி
விசாரணைக் குழுவிலிருந்து
இருவரை நீக்கக் கூறி
செய்யப்பட்ட விண்ணப்பத்தை
டத்தோ மகாதேவ் சங்கரனும்
எமெரிதியூஸ் பேராசிரியர்
டத்தோ டாக்டர் கோ காய்
கிம்மும் நிராகரித்தனர்.
அவர்கள் இருவர்
மீதான குற்றச்சாட்டு
அடிப்படை அற்றது என்பதோடு
உண்மைக்குப் புறம்பானது
எனக் கூறி அவர்கள் அந்த
மனுவை நிராகரித்தனர்.யூசோப்
சின், மகாதேவ் சங்கரின்
ஆணையர் தகுதியை ரத்து
செய்ய வேண்டும் என்று
விண்ணப்பித்திருந்தார்.
லிங்கம் ஏற்பாட்டில்
மகாதேவ் கண் சிகிச்சைப்
பெற்றுக் கொண்டதை அவர்
காரணம் காட்டினார். அதே
சமயம் கோவின் தகுதியை
ரத்து செய்யக் கூறி லிங்கம்
விண்ணப்பப்பித்திருந்தார்.
எனினும் இருவரது விண்ணப்பமும்
இன்று நிராகரிக்கப்பட்டது.
டத்தோ‚ சாமிவேலுவின்
நிலை - பிரதமர் விளக்கம்